Home இந்தியா சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்!

சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்!

1054
0
SHARE
Ad

சென்னை – ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் மாபெரும் கூட்டணி ஒன்றை அமைப்பதற்காக அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என ஊடகங்கள் கணித்துள்ளன.

ஏற்கனவே, தனது கட்சியான தெலுகு தேசம் காங்கிரஸ் கூட்டணியில் இணையும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.