Home 13வது பொதுத் தேர்தல் பவுசி அப்துல் ரஹ்மான் – பிகேஆர் கட்சியின் இண்ட்ரா மகோத்தா நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிப்பு

பவுசி அப்துல் ரஹ்மான் – பிகேஆர் கட்சியின் இண்ட்ரா மகோத்தா நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிப்பு

984
0
SHARE
Ad

Fauzi-Abdul-Rahman-Sliderகுவாந்தான், மார்ச் 30 –  பகாங் மாநில பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழுவின் தலைவர் டத்தோ பவுசி அப்துல் ரஹ்மான் (படம்) பகாங் மாநிலத்திலுள்ள இண்ட்ரா மகோத்தா நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அசான் இஸ்மாயிலுக்கு பதிலாக பவுசி இண்ட்ரா மகோத்தா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அசான் இஸ்மாயில் இந்த முறை திரெங்கானுவில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

“பவுசி எங்களின் பழைய நண்பர். அதனால் அவருக்கு இண்ட்ரா கோத்தாவில் போட்டியிட வாய்ப்பு வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று குவாந்தான் அருகிலுள்ள பாலோக் மாக்மோர் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

2008 பொதுத் தேர்தலில் இண்ட்ரா மகோத்தா தொகுதியில் பிகேஆர் கட்சியின் வேட்பாளர் அசான் இஸ்மாயில் 1,027 வாக்குகள் வித்தியாசத்தில், தேசிய முன்னணியின் வேட்பாளர் சலாமோன் அலி ரிசால் என்பவரைத் தோற்கடித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இண்ட்ரா மகோத்தா தொகுதியில் போட்டியிடப் போகும் பவுசி முன்பு அம்னோவில் தீவிரமாக இருந்தவர். குவாந்தான் அம்னோ தொகுதியின் தலைவராகவும் இருந்தவர்.

1990 முதல் 1995 வரை தகவல் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றியவர் என்பதோடு, 1995 முதல் 1997 வரை நில, கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997 முதல் 1999 வரை பிரதமர் துறை இலாகாவின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர் பவுசி.

2008ஆம் ஆண்டில் அம்னோவில் இருந்து விலகி பிகேஆர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

2008 பொதுத் தேர்தலில் பகாங் மாநிலத்தில் தேசிய முன்னணி மொத்தமுள்ள 14 தொகுதிகளில் இரண்டில் தோல்வி கண்டது. குவாந்தான் மற்றும் இண்ட்ரா மகோத்தா ஆகியவையே அவை.

இரண்டையுமே பிகேஆர் வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பெர்னாமா