Home இந்தியா பிரதமர் பதவிக்கு எங்களுக்குள் போட்டியில்லை- அத்வானி

பிரதமர் பதவிக்கு எங்களுக்குள் போட்டியில்லை- அத்வானி

689
0
SHARE
Ad

atwaniகுஜராத், மார்ச் 31- பிரதமர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சிக்குள் எந்தவிதமான போட்டியும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்று கூறப்படும் நிலையில் அத்வானியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குஜராத் தலைநகர் காந்திநகரில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அத்வானி, நாடாளுமன்றத்துக்கு இந்த ஆண்டிலேயே தேர்தல் வரக்கூடும் என்றும் தெரிவித்தார். 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்திக்கும் என்றும் அத்வானி கூறினார்.

#TamilSchoolmychoice

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய அத்வானி, அவருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.