Home உலகம் நாட்டை விட்டு வெளியேற முஷாரப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடை

நாட்டை விட்டு வெளியேற முஷாரப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடை

442
0
SHARE
Ad

musharaf-sliderஇஸ்லாமாபாத், மார்ச் 31- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு, அந்நாட்டின் பெடரல் புலனாய்வு நிறுவனம்  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், “முன்னாள் அதிபர் முஷாரப்  வெளிநாடு சென்று விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்’ என தெரிவித்து உள்ளது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் சிந்து மாகாண உச்சநீதிமன்றத்தில் முஷாரப்பிற்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில், “நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு முஷாரப் வெளியேறக் கூடாது’ என, தெரிவித்தது. இதையடுத்து, விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முஷாரப் கடந்த, 24ம் தேதிதான் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.