Home கலை உலகம் ஹன்சிகாவை தூக்க சிரமப்பட்ட ஆர்யா

ஹன்சிகாவை தூக்க சிரமப்பட்ட ஆர்யா

643
0
SHARE
Ad

arya-hanshikaசென்னை, மார்ச் 31- சேட்டை படத்தில் நடிக்க ஆரம்பித்தபோது உடல் பருத்து இருந்த ஹன்சிகா, தற்போது தன் எடையை குறைத்துள்ளார்.

சேட்டை படத்திற்காக புகைப்படங்கள் எடுக்கும் போது ஹன்சிகாவை தூக்கியபடி ஆர்யாவை காட்சி கொடுக்க சொன்னபோது அவரால் தூக்க முடியவில்லையாம்.

அதைப்பார்த்த இயக்குனர் கண்ணன் உடம்பை இன்னும் நிறைய குறைத்தால் தான் பாடல் காட்சிகளில் ஆர்யா உங்களை தூக்க முடியும் என்றாராம்.

#TamilSchoolmychoice

அதோடு ஏற்கனவே சில இயக்குனர்களும் ஹன்சிகாவின் உடம்பு நாளுக்கு நாள் பெருத்து வருவதை சுட்டிக்காட்டி இப்படியே விட்டால் பிந்துகோஸின் தங்கையாகி விடுவீர்கள் என்றும் ஜாடைமாடையாக சொல்லி கிண்டல் செய்தார்களாம்.

இந்த நிலையில் அவரது அம்மா உடம்பிலுள்ள கொழுப்பு சத்தை கரைத்து விடும் இயற்கை உணவுகள் சிலவற்றை ஹன்சிகாவுக்கு தினமும் மூன்று வேளையும் கொடுத்து வந்தாராம். கூடவே சில உடற்பயிற்சிகளையும் செய்ததன் விளைவு ஓரிரு மாதங்களிலேயே ஹன்சிகாவின் உடல் இளைத்து ஒல்லியாகி விட்டாராம். அதனால் சேட்டை படத்தின் முதல் பாதியில் குண்டாகவும், இரண்டாவது பாதியில் இளைத்தும் இருப்பாராம் ஹன்சிகா.

இந்த எடை குறைவு பற்றி சேட்டை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சொன்ன ஹன்சிகா, இனிமேல் இதே உடம்பை அப்படியே கவனிக்க போகிறேன். மேலும், விதவிதமான ஆடைகளில் சிக்கென தோன்றி ரசிகர்களை சிறை பிடித்து வைத்திருப்பேன் என்கிறார்.