Home கலை உலகம் முதிர்ச்சியான வேடத்தில் நடித்தது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்

முதிர்ச்சியான வேடத்தில் நடித்தது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்

627
0
SHARE
Ad

vijay-sethupathiசென்னை, மார்ச் 31- திரையுலகைப் பொறுத்தவரை 50 வயதை கடந்த நாயகர்கள் கூட திரையில் தங்களை இளமையாக காட்டிக்கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள்.

16 வயது பெண்களுடன் ஆடி பாடுகிறோமே என்று அவர்கள் துளியும் சங்கடப் படுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

ஆனால் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்த விஜய் சேதுபதி சற்று வித்தியாசமானவராக இருக்கிறார்.

#TamilSchoolmychoice

தற்போது அவர் நடித்து வரும் சூதுகவ்வும் படத்தில் 40 வயதை கடந்த அதாவது தலையிலும்  மீசையிலும் ஆங்காங்கே நரை முடிகள் தென்படுகிற வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தமாதிரி முதிர்ச்சியான வேடத்தில் நடிப்பது ஏன்? என்று அவரைக்கேட்டால், கதை பிடித்திருந்தது அதனால் நடிக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை கதையில் இளமை இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. அதில் நான் எந்தமாதிரியான மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை மட்டும்தான் யோசிப்பேன்.

அது இருக்கிற பட்சத்தில் எத்தனை முதிர்ச்சியான வேடத்தில் நடிக்கவும் தயங்கமாட்டேன். காரணம், நான் எப்போதுமே கதையின் நாயகன்தான்.

இந்த வகையில் இருபது முதல் அறுபது வரை எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் கவலையில்லை என்கிறார் விஜய்சேதுபதி.