Home இந்தியா பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது

456
0
SHARE
Ad
அத்வானியுடன் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

புதுடில்லி : பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டப்படுவதற்கும், அதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரை சென்றதிலும் முக்கிய பங்கு வகித்தவர் அத்வானி. பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வெளியானதும் அவருக்கு இனிப்பு வழங்கி அவரின் மகள் கொண்டாடிய காணொலிக் காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்பின.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட நரேந்திர மோடி “நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice