Home Featured கலையுலகம் பிரதமர் மோடி – அத்வானியை சந்திக்க ரஜினிகாந்த் திட்டம்!

பிரதமர் மோடி – அத்வானியை சந்திக்க ரஜினிகாந்த் திட்டம்!

1058
0
SHARE
Ad

Narendra Modiபுதுடெல்லி – நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ’2.0’ படப்பிடிப்பு டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு உள்ளன. இதற்காக ரஜினி, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லி சென்றிருக்கின்றார்கள்.

ஒரு மாதம் டெல்லியில் படப்பிடிப்பு நடத்த திட்ட மிட்டுள்ளனர். ரஜினிகாந்த்தும் ஒரு மாதம் டெல்லியில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள பத்ஸ்ரீ பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கும் விழா வரும் 28-ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 12 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

#TamilSchoolmychoice

கலைத்துறையில் ரஜினியின் சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது ரஜினி டெல்லியில் இருப்பதால் இந்த விழாவில் பத்மவிபூஷன் விருதை ரஜினி நேரில் சென்று பெற இருக்கிறார்.

இந்நிலையில், ரஜினி டெல்லியில் தங்கி இருக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இதற்காக நேரம் கேட்டு ரஜினி அலுவலகத்தில் இருந்து மின் அஞ்சல் மூலம் இருவர் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பத்மவிருது வழங்கும் விழா நடைபெறுவதற்கு முன்பு சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கும், அத்வானிக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அத்வானி அலுவலக செயல் அதிகாரிகள் மூலம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே முதல் கட்டமாக வரும் 28-ஆம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவிலேயே ரஜினிக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறையை, பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இது பற்றிய தகவல் ரஜினி காந்த்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபைதேர்தல் வரும் நிலையில் பிரதமரையும், அத்வானியையும் ரஜினிகாந்த் சந்திக்க நேரம் கேட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

இருதலைவர்களையும் சந்தித்த பிறகு ரஜினி தமிழக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.