Home இந்தியா ‘கஜா’ புயல் : வேகம் அதிகரிப்பு – தயாராகும் தமிழகம்!

‘கஜா’ புயல் : வேகம் அதிகரிப்பு – தயாராகும் தமிழகம்!

1159
0
SHARE
Ad

சென்னை – நாளை வியாழக்கிழமை மாலை பாம்பன் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கஜா புயலை நோக்கி தமிழகமே தற்போது காத்திருக்கிறது. இதனால் இன்று இரவு முதலே தமிழகத்தின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

மேலும் விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட 7 மாநிலங்களில் புயல் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தற்போது 6 கிலோ மீட்டர் வேகத்தில் நிலைகொண்டிருக்கும் கஜா புயல் தமிழகக் கரையை நெருங்கும்போது இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அபாயத்தை முன்னிட்டு பல்வேறு மீட்புப்படைக் குழுக்கள் சிதம்பரம், நாகை போன்ற பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.

ஆகக் கடைசியாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களின்படி தற்போது கஜா புயலின் வேகம் மணிக்கு 13 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. சென்னைக்கு தென்மேற்கே 430 கிலோமீட்டர் தூரத்திலும் நாகைக்கு அருகில் 510 கிலோமீட்டர் தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்திற்குள் பாம்பன் மற்றும் கடலூர் இடைப்பட்ட பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.