சினார் ஹரியான் பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் நஜிப் இவ்வாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் அந்தப் பத்திரிக்கையின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.
“ஜோ லோ இந்தக் குற்றங்களைப் புரிந்திருப்பது தெளிவாகத் தெரிந்தால் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் கோல்ட்மேன் சாச்ஸ் என்ற உலக அளவில் முன்னணி வங்கியும், வழக்கறிஞர்களும், கணக்காய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். நாட்டின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு இவர்கள் அனைவருக்கும் இருந்தது. ஆனால் அவர்கள் தங்களின் கடமையிலிருந்து தவறி விட்டனர். இதுபற்றி எப்படி எனக்குத் தெரிந்திருக்க முடியும்?” என்றும் நஜிப் கேள்வி எழுப்பினார்.
கோல்ட்மேன் சாச்ஸ், அதன் வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள் என அனைவரும் சில விஷயங்கள் முறையாக நடைபெறவில்லை என்பதைத் தெரிவித்திருக்க வேண்டும். நாட்டின் நலனைப் பாதுகாத்திருக்க வேண்டும். அவர்கள் அந்தப் பொறுப்புகளை செய்யத் தவறிவிட்டனர்” என்றும் நஜிப் மேலும் தெரிவித்தார்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இறுதியில் ஜோ லோ மலேசியாவை ஏமாற்றிவிட்டார் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டார்.