Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூருக்கு டிசம்பர் 1 முதல் பையர் பிளை விமான சேவைகள் இல்லை

சிங்கப்பூருக்கு டிசம்பர் 1 முதல் பையர் பிளை விமான சேவைகள் இல்லை

968
0
SHARE
Ad

சிங்கப்பூர் – எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கான தனது விமானப் பயண சேவைகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக பையர் பிளை நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசியப் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 1 முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து பையர் பிளை நிறுவனம் தனது சேவைகளை சிங்கப்பூரின் புதிய விமான நிலையமான செலத்தார் விமான நிலையத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என சிங்கை அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

பையர் பிளை நிறுவனம் மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) விமான நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமானதாகும்.

சம்பந்தப்பட்ட அதிகார மையங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவுகள் எடுக்கப்படும்வரை இடைக்காலத்திற்கு சிங்கப்பூருக்கான சேவைகளை பையர் பிளை நிறுத்தப் போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

80 மில்லியன் டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட செலத்தார் விமான நிலையம் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி திறக்கப்பட்டது. சில வணிக நோக்கத்திலான விமான சேவைகள் மற்றும் தனியார் விமானங்களைப் பயன்படுத்தி வரும் வணிகர்கள், முழு விமானத்தையும் வாடகைக்கு அமர்த்தி மேற்கொள்ளப்படும் பயண சேவைகள் ஆகிய அனைத்தும் இனி செலத்தார் முனையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட செலத்தார் விமான நிலையம் ஆண்டுக்கு 7 இலட்சம் பயணிகள் வரை கையாளும் வசதிகளைக் கொண்டிருக்கிறது.

சுபாங், ஈப்போ, குவாந்தான் ஆகிய நகர்களிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் வகையில் ஒருநாளைக்கு சுமார் 20 சேவைகளை பையர் பிளை வழங்கி வந்தது.