Home நாடு சீ பீல்ட் ஆலயம் : இன விரோத அறிக்கைகள் வேண்டாம் – மொகிதின் யாசின் கோரிக்கை

சீ பீல்ட் ஆலயம் : இன விரோத அறிக்கைகள் வேண்டாம் – மொகிதின் யாசின் கோரிக்கை

813
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இன விரோதத்தைத் தூண்டிவிடும் அறிக்கைகள் விடுப்பதையோ, இஷ்டம்போல் நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்குமாறு உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை சீ பீல்ட் ஆலய வளாகத்தில் நடைபெற்ற சச்சரவுகள் குறித்துக் கருத்துரைக்கையில் பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் இவ்வாறு கூறினார். அப்படிச் செய்தால் காவல் துறையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதோடு, சட்டப்படியான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் உதவியாக அமையும்.

“இந்த சம்பவத்தை நான் கடுமையாகக் கருதுகிறேன். நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைகுலையச் செய்யும் எந்த தரப்பினரின் முயற்சிகளையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். காவல் துறையினர் பல சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்திருப்பதாகவும், சட்டவிதிகளின்படி புலனாய்வு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் எனக்குத் தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முழுமையான விசாரணைகள் நடத்தும்படியும், சட்டத்தை மீறுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றும் மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

இதுவரையில் 17-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, நடந்த கலவரம் தொடர்பில் விசாரணைகளும் நடத்தப்படுகின்றன்.