Home நாடு இந்து அமைப்புகள், ஆலயத் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் – மாமன்றம் அழைப்பு

இந்து அமைப்புகள், ஆலயத் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் – மாமன்றம் அழைப்பு

1445
0
SHARE
Ad
Hindu Dharma Mamanram logo

கோலாலம்பூர் – நாட்டிலுள்ள அனைத்து இந்து சமய அமைப்புகள் மற்றும் ஆலயத் தலைவர்களுடன் நடப்பு விவகாரங்களை விவாதிக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அவசரக் கூட்டத்தின் விவரம் பின்வருமாறு:

தேதி : 01 டிசம்பர் 2018 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 2.00 முதல் 6.00 வரை
இடம் : சிக்னேச்சர் ஹோட்டல், புடு (கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் பின்புறத்தில்)

#TamilSchoolmychoice

“பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால், தற்பொழுது மலேசிய இந்தியர்களுக்கிடையே, குறிப்பாக இந்துக்களிடையே நிலவி வரும் வருத்தமளிக்கும் இனத்துவேசச் செயல்கள், சமூக ஊடகங்களில் மனிதாபிமானமற்ற வகையில் கொச்சை மொழிகளால் வசைப்பாடும் அநாகரீகச் செயல்கள் போன்றவை மிகவும் வருத்தம் அளிக்கின்றன. சீபீல்டு ஆலய விவகாரம் நமக்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும். ஆகவே இந்துக்களாகிய நாம் ஒன்றிணந்து திட்டமிட்டுச் செயல்படும் நேரம் வந்து விட்டது. மலேசியாவில் இனி வரும் காலங்களில் இந்து ஆலயங்கள் உடைபடாமலிருக்க ஒரு முடிவு கட்டுவோம் வாரீர்” என இந்தச் சந்திப்புக் கூட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்து தர்ம மாமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

“கடந்த கால, நிகழ்கால அரசாங்கங்களுக்கு ஆலய விவகாரம் குறித்துப் பல முறை பலவிதமான கடிதங்கள்/ மனுக்கள்/ தீர்மானங்கள்/ மகஜர்கள் அனுப்பி அலுத்துப் போய் தெருப் போராட்டமே நமக்குக் கதியாகிவிட்டது. இம்முறை நம் தலையெழுத்தை மாற்ற நாமே நல்லதொரு தீர்வோடு அனைவரும் இணைந்து அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” என வலியுறுத்தியுள்ள மாமன்றம்,

மாமன்ற தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை

“மதிப்பிற்குரிய இந்து அமைப்புகளின் தலைவர்கள், ஆலயத் தலைவர்கள், ஆசிரம ஆதீனத் தலைமைப் பீடாதிபதிகள் முதலிய அனைவரும் திரளாக இந்தக் கூட்டத்தில் கலந்து ஒருமனதோடு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் நம் வருங்கால சந்ததியினரை நிம்மதியாக வாழ வைக்கவும் தவறாமல் முன் வாருங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வருகையை முன் உறுதி செய்வது அவசியம். தொடர்புக்கு:

  1. திரு.சுப்பிரமணி ( 013-3973134 )
  2. திரு.விசுவநாதன் ( 016-3392234 )
  3. திரு.ரிஷிகுமார் ( 012-2016115 )
  4. திரு.ரமேஷ்குமார் ( 016-2085551)
  5. மாமன்ற அலுவலகம் ( 03-22761256 )

“நமது ஆலயம் நமது அடையாளம்! அதைக் காப்பது நம் கடமையாகும்! தவறாமல் ஒன்று திரள்வோம்! தீர்க்கமான முடிவெடுப்போம்” என மாமன்றத் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை மாமன்றத்தின் சார்பில் அழைப்பு விடுத்திருக்கிறார்.