Home நாடு மே 13 கலவரம்: மலாய்க்காரர்களின் புகலிடமாக இருந்த இந்து கோயில்

மே 13 கலவரம்: மலாய்க்காரர்களின் புகலிடமாக இருந்த இந்து கோயில்

1253
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மே 13 கலவரம் குறித்த பதிவுகள் வரலாற்று நூல்கள், குறிப்புகளில் கிடைக்கப் பெற்றாலும், ஒரு சிலரின் அனுபவபூர்வமான கதைகள் நம்மை அக்கால சூழலுக்கே இட்டுச் செல்லும். அவ்வாறு அம்னோவின் மூத்த உறுப்பினரான சஹாரின் மொகாமட் யாசின் (வயது 50), அக்கலவரத்தின் போது எப்படி ஓர் இந்து கோயில் மலாய்க்காரர்களின் புகலிடமாக மாறியது என்பதை நினைவூட்டியுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், 1969-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த சம்பவத்தில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தபோது, ​​கம்போங் பண்டானில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் மக்களுக்கு அடைக்கலமாக அமைந்தது என மொகாமட் யாசின் தெரிவித்தார்.

கம்போங் பண்டானுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு, பெரும்பாலான பள்ளிகள், மண்டபங்கள், சமூகநல இல்லங்கள் அடைக்கப்பட்டன” என யாசின் கூறியதாக ஸ்டார் நாளிதழ் தெறிவித்தது.

#TamilSchoolmychoice

ஜாலான் புடு மற்றும் புக்கிட் பிந்தாங் பகுதிகள் ஆபத்தானது என்று சுட்டிக்காட்டி, கோவிலில் உள்ள பூசாரி மலாய் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கோயிலில் அடைக்கலம் புகுவதற்கு அழைத்ததாகக் கூறினார்.

“அவர்கள் இரவு முழுவதும் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டனர். காலையில், அவர்கள் காவல் துறையின் பாதுகாப்போடு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.”

“இந்த இந்து கோவில் மே 13 சம்பவத்தில் மலாய்க்காரர்களின் உயிர்களை காப்பாற்றியது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்என்று சஹாரின் எழுதியிருந்தார்.

சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கலவரத்திற்குப் பிறகு அவரது இப்பதிவிற்கு முகநூல் பக்கத்தில்  7,000 விருப்புகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ முனீஸ்வரர் கோயிலின் நிர்வாகக் குழு சஹாரினுக்கு அதன் முகநூல் வழி அப்பதிவிக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மலேசியாவிலுள்ள அனைத்து மத வழிபாடு இடங்களும் தேவைப்படும் நேரத்தில் பிற இனங்களுக்கு உதவும் எனவும், இந்து மதம் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பதற்கு இதர இன நண்பர்களை தங்கள் கோயிலுக்கு எப்பொழுதும் வரவேற்பதாகவும், இதன் வாயிலாக அனைவரும் இக்கலாச்சாரத்தை கற்றுக் கொள்ளவும் முடியும்,” என்று அப்பதிவு குறிப்பிட்டிருந்தது.