புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டான்ஶ்ரீ சுல்கிப்லி அகமட் 1எம்டிபியின் கணக்கறிக்கையில் உண்மைகளை மறைத்து மாற்றி அமைத்ததற்காக இன்று விசாரிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் இவ்விசாரணைக்கு உதவும் பொருட்டில் அழைக்கப்படுவர் எனவும் நம்பப்படுகிறது. கடந்த நவம்பர் 25-ம் தேதி தேசிய கணக்காய்வாளர் ஜெனரல் டான்ஸ்ரீ மடினா மொகமட், 1எம்டிபி கணக்கறிக்கையில் ஜோ லோ குறித்த தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறினார்.
அவ்வறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டடுமென்று டான்ஶ்ரீ சுக்ரி சலேவிடமிருந்து உத்தரவு பெறப்பட்டாதாக மடினா மேலும் குறிப்பிட்டார். சுக்ரி முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ராசாக்கிற்கு பிரதான செயலாளராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் 2016-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதியில் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், 1எம்டிபியின் மாற்றம் செய்யப்படாத கணக்கறிக்கையைமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.