Home நாடு சிவராஜ் மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதி

சிவராஜ் மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதி

2124
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு தனது நாடாளுமன்றப் பணிகளை மேற்கொள்ள மக்களவை சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் அனுமதி அளித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு தேசிய முன்னணி தலைவர் சாஹிட் ஹமிடி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

சிவராஜின் வழக்கறிஞர்களிடம் இருந்து பெற்ற ஆலோசனைகள் மற்றும் மற்ற சட்ட அறிஞர்களிடம் இருந்து பெற்ற சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice