Home கலை உலகம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு

1271
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் நடித்து பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளான சர்கார்படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் வண்ணமாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்படத்தில், அரசு இலவசமாக வழங்கும் மின்கலவை (மிக்சி) மற்றும் அரவை (கிரைண்டர்) இயந்திரம் போன்ற பொருட்களை தீயிட்டு எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு காட்சியில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து சர்கார்படத்தினை திரையிட்டு வந்த திரையரங்குகள் முன்பு முற்றுகை போராட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டனர். கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்துசர்கார்படத்தில் இடம்பெறும் அக்காட்சிகள்  நீக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து, அரசுக்கு அவதூறு ஏற்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் மனு ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் ஏ.ஆர். முருகதாஸை விசாரணைக்கு உட்படுத்த வேண்டி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்தனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததற்காக ஏ.ஆர். முருகதாஸ் மன்னிப்பு கேட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்க மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ், மன்னிப்புக் கோரவில்லை.   

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.  .ஆர்.முருகதாஸ் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே இந்த பிரச்சினையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர்.