Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு

புரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு

1104
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசியக் கார் தயாரிப்பாளரான புரோட்டோனின் (Proton) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட X70 எனும் எஸ்.யூ.வி. (SUV) ரக வாகனம் நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்களால் வெளியிடப்பட்டது.

நான்கு வகையான வெவ்வேறு அம்சங்களுடன் இக்கார் தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இதன் ஆரம்ப விலையாக 99,800 ரிங்கிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக, தீபகற்பம் மற்றும் சபா, சரவாக்கிலும் இதே விலையில் இக்கார்கள் விற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

புரோட்டோனின் முழுமையான பங்கு இக்கார் வடிவமைப்பில் இல்லையென்றாலும், எதிர்காலத்தில் இம்மாதிரியான புதிய ரக கார்களை புரோட்டோன் தயாரிக்க புதிய வழிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய வாகன வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவ்வாகனத்திற்கு, அக்டோபர் 2018 வரை, சுமார் 10,000 -க்கும் அதிகமான முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புரோட்டோன் மற்றும் சீன வாகன தயாரிப்பு நிறுவனமான கீலியும் இணைந்து தயாரித்த முதல் வாகனமாக இக்கார் விளங்குகிறது.