Home நாடு சீ பீல்ட்: 21 பேர்கள் மீது குற்றப்பதிவு

சீ பீல்ட்: 21 பேர்கள் மீது குற்றப்பதிவு

719
0
SHARE
Ad

கிள்ளான்:  சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 21 நபர்கள் மீது குற்றப்பதிவை மேற்கொள்ள காவல் துறைக்கு, அரசாங்க தரப்புத் துணை வழக்கறிஞர், உத்தரவு வழங்கிவிட்டதாக சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர், மஸ்லான் மன்சோர் கூறினார்.

இதுவரையிலும் இக்கலவரம் குறித்து 67 விசாரணை ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், 106 பேர்கள் இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அவர்களில் பெரும்பாலானோர் கலகம் செய்ததற்காக, குற்றப்பிரிவுச் சட்டம் 148-வது பிரிவின் கீழும், மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக சட்டம் 325-வது பிரிவின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்”,  என அவர் குறிப்பிட்டார்.