Home உலகம் இலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்

இலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்

1340
0
SHARE
Ad

கொழும்பு – ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் அந்த முடிவுகள் செல்லாது என்றும், அதன் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமராகச் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும் இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியிருப்பதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை தனது பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகினார்.

அதைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தொடர்ந்து கூறி வருவதால் இலங்கை அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது.

#TamilSchoolmychoice

ரணிலை மீண்டும் பிரதமராக மீண்டும் நியமிக்கப்படவில்லை என்றால், இலங்கை அரசாங்க இயந்திரங்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதற்கொண்டு முழுமையாக இயங்க முடியாது முடக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதால் நாளை ரணிலை மீண்டும் சிறிசேனா பிரதமராக நியமிப்பாரா என்ற கேள்வியுடன் கூடிய பரபரப்பு இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளது.