Home உலகம் ஏஎப்எப் சுசுகி கிண்ணம் : வியட்னாம் 1 – மலேசியா 0

ஏஎப்எப் சுசுகி கிண்ணம் : வியட்னாம் 1 – மலேசியா 0

1000
0
SHARE
Ad

ஹனோய் – வியட்னாமின் ஹனோய் நகரில் இன்று இரவு நடைபெற்ற மலேசியாவுக்கும், வியட்னாமுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று இறுதி ஆட்டத்தில் வியட்னாம் 1-0 கோல் எண்ணிக்கையில் வென்றதன் வழி ஏஎப்எப் சுசுகி கிண்ணத்தை வாகை சூடியது.

கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதலாவது சுற்று ஆட்டத்தில் 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் மலேசியாவும் வியட்னாமும் சமநிலை கண்டிருந்தன.

வியட்னாமின் ஒரே கோலை ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்தில் ங்குயென் அன் டக் புகுத்தினார். அதைத் தொடர்ந்து மலேசியா பல முயற்சிகள் செய்தும் கோல் அடிக்க முடியவில்லை.

#TamilSchoolmychoice

இன்றைய ஆட்டத்தில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வியட்னாம் வென்றதைத் தொடர்ந்து, இரண்டு ஆட்டங்களையும் இணைத்து மொத்தம் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வியட்னாம் வெற்றி பெற்று ஏஎப்எப் சுசுகி கிண்ணத்தை வெற்றி கொண்டது.