Home வணிகம்/தொழில் நுட்பம் ஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்

ஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்

1838
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து ஸ்ட்ரீமிக்ஸ்  (Streamyx) பயனர் சேவையும் யுனிபை சேவைக்கு (Unifi) மேம்படுத்தப்படும் என, தகவல் தொடர்புத் துறை மற்றும் பல்லூடக துணை அமைச்சர் எடின் ஷாஸ்லீ சீத் கூறினார்.

கட்டம் கட்டமாக இம்முறை யுனிபை உள்ள இடங்களில் மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இந்த சேவையானது இலவசமாக பயனர்களுக்கு செய்துத் தரப்படும் எனவும் அமைச்சர் கூறினார் .

ஸ்ட்ரீமிக்ஸ் சேவையைப் பயன்படுத்துவோரின் பிரச்சனைகளை சமாளிக்க அரசாங்கத்தால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மேலவையில் கேட்கப்பட்டக் கேள்விக்கு பதில் அளித்த போது எடின் இவ்வாறு கூறினார்.