கோலாலம்பூர் – சீபீல்ட் ஆலய கலவரத்தில் கடுமையாகக் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் இன்று இரவு 9.41 மணியளவில் தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார் என ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சர் சுரைடா கமாருடின் அறிவித்தார்.
நாளை முகமட் அடிப்பின் நல்லுடல் இறுதிச் சடங்குகளுக்காக கோலாலம்பூரில், ஜாலான் ஹங் துவாவில் உள்ள தீயணைப்பு மையத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் சுரைடா கமாருடின் தெரிவித்திருக்கிறார்.