Home உலகம் 14 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியில் இறந்தவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!

14 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியில் இறந்தவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!

846
0
SHARE
Ad

அச்சே: 14 ஆண்டுகளுக்கு முன்பு அச்சேவில் நடந்த ஆழிப் பேரலை (சுனாமி) காரணமாக இலட்சக்கணக்கான உயிர்கள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இன்னமும், அத்துயரச் சம்பவத்தில் இருந்து அப்பகுதி மக்கள் மீளாதிருப்பது சமீபக் காலமாக செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே, கஜூ கிராமத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், 2004-ம் ஆண்டு பெருவெள்ளத்தில் இறந்தோரின் 45 சடலங்களை அக்கிராமத்தில் கண்டெடுத்தனர். அச்சே பேரழிவு பாதுகாப்பு அமைப்பின் தலைவர், தெகு அகமட் டாடெக் கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட சடலங்களில், 25 ஆண்களும், இதர 20 சடலங்கள் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் அப்பகுதியானது உண்மையில் கூட்டம் கூட்டமாக ஆழிப் பேரலைகளில் இறந்தவர்களைப் புதைத்த சவக்குழி என தங்களுக்குத் தெரியாது எனக் கூறினர்.

#TamilSchoolmychoice

2004-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பெரும் பகுதியாக இக்கிராமம் உள்ளது.

அப்பேரழிவின் போது, கஜூ கிராமத்தில் வசித்தவர்களில் 85 சதவிகிதம் பேர் கொல்லப்பட்டனர்.