லாபுவான்: பருவகால நிலை மாற்றமானது ஆமைகள் கடலில் வாழ போராடுவதற்கான முக்கியக் காரணமல்ல என லாபுவான் நீர்வளத் துறைத் தலைவர் அனுவார் டெராமான் கூறினார். மாறாக, ஆமைகளின் முட்டைகளை திருடுவதும், விற்பதும், அவற்றைச் சாப்பிடுவதும் தான் முக்கியக் காரணமாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஒரு சிலரின் பொறுப்பற்ற இச்செயல்களினால் ஏறக்குறைய ஆறு ஆமைகளின் கூடுகள் இதுவரையிலும் தோண்டப்பட்டு, முட்டைகள் திருடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். மேலும், கடல் நடுவே உள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் கட்டுப்பாடில்லாத மீன்பிடிப்பு நடவடிக்கைகளும் ஆமைகள் சபா பகுதிகளுக்கு வருவதை தடுக்கிறது என அவர் கூறினார்.