Home நாடு ஹிண்ட்ராப்: வேதமூர்த்தி மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் களைய வேண்டும்!

ஹிண்ட்ராப்: வேதமூர்த்தி மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் களைய வேண்டும்!

816
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுக்குப் பின்னர், ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவி விலகக் கோரி அதிகமான அரசாங்க மற்றும் அரசாங்கம் சார்பற்ற அமைப்புகள் அறிக்கைகளை விடுத்து வருகின்றன.

இந்த போக்கினை மலேசிய அரசாங்கம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் அமைப்பு கேட்டுக் கொண்டது. இவ்வாறான சூழலைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் இன அரசியலை தூண்டும் விதமாக, ஒரு சில தரப்பினர் நடந்து கொள்வதாக அவ்வமைப்புக் கூறியது.

ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர், கார்த்திக் ஷான் கூறுகையில், அடிப்பின் மறைவைக் காரணமாகக் காட்டி மக்களிடத்தில் அமைச்சர் வேதமூர்த்தியின் நற்பெயரை கெடுக்க ஒரு சிலர் முனைப்பாக ஈடுபடுவதோடு, அதனை இனப் பிரச்சனையாகவும் உருவாக்கி வருகின்றனர் என்றார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இவ்விவகாரத்தை கவனிக்க வேண்டிய அவசியத்தையும், விரைவில் இவ்விவகாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.   

கடந்த மாதம், சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் பலத்தக் காயமுற்ற அடிப் கடந்த செவ்வாயன்று காலமானர்.