சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என மூன்று பெயர்களில் தொலைக்காட்சிக்கானப் பெயரைப் பதிவு செய்திருக்கிறோம் எனவும் ரஜினிகாந்த் அறிவித்தார்.
இந்தப் பெயர்களைக் கொண்டு மற்றவர்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்கப் போவதாகத் தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து உடனடியாக இந்தப் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக ரஜினி தெரிவித்தார்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் தீவிர அரசியலில் இறங்கப் போவதாக ரஜினி அறிவித்து வரும் நிலையில், அவர் சொந்த தொலைக்காட்சி தொடங்குவது அவருக்கு மிகவும் ஆதரவாக அமையும் என்பதோடு, அவரது இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments