Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மய்யம் போட்டியிடுகிறது

நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மய்யம் போட்டியிடுகிறது

1088
0
SHARE
Ad

சென்னை – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்றும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் கமல்ஹாசன் அறிவித்தார்.

மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து கூட்டணி அமைப்பார் என்ற ஆரூடங்கள் நிலவி வந்த வேளையில் அண்மையில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. எனவேதான், கமல்ஹாசன் தனியே நாடாளுமன்றத் தேர்தலில் களம் காண முடிவெடுத்து விட்டார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.