Home உலகம் இந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்

இந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்

1240
0
SHARE
Ad
இந்தோனிசியாவில் சுனாமி தாக்கிய பகுதிகள் சிவப்பு நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளன

ஜாகர்த்தா – பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென் லாம்புங் (Pandeglang, Serang and South Lampung) போன்ற சில பகுதிகளை ஆழிப் பேரலைத் தாக்கியுள்ளது.

இதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 168-ஆக உயர்ந்திருக்கும் அதே வேளையில் குறைந்தது 745 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

இதுவரையில் 30 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

சுனாமியால் சுற்றுலாப் பகுதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. சுமார் 558 வீடுகளும் 9 தங்கும் விடுதிகளும் மோசமான நிலையில் சேதமடைந்தன. மேலும் 60 உணவகங்களும் 350 படகுகளும் சேதமடைந்திருக்கின்றன.

இதுவரையில் வெளிநாட்டவர்கள் யாரும் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. மரணமடைந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர்களும், உள்நாட்டுச் சுற்றுப் பயணிகளும் ஆவர்.