Home நாடு அரசாங்க விடுதிப் பள்ளிகளில் ஏழ்மை நிலை மாணவர்களுக்கு முன்னுரிமை

அரசாங்க விடுதிப் பள்ளிகளில் ஏழ்மை நிலை மாணவர்களுக்கு முன்னுரிமை

848
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு, அரசாங்க விடுதிப் பள்ளிகளில் (Full Residential Schools), ஏழ்மை நிலைக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களின் சேர்க்கையானது 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனக் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.

கல்வியில் சிறந்து விளங்கும் ஏழ்மை நிலை மாணவர்களுக்கு உதவும், கல்வி அமைச்சின் உன்னத நோக்கத்தினை இது பிரதிபலிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2019-ஆம் ஆண்டில், இப்பள்ளிகளில் பயில அனுமதிக்கப்பட்ட 9,350 மாணவர்களில், 52 விழுக்காடு, அல்லது 4,888 மாணவர்கள் வறிய நிலைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள் என அமைச்சு தெரிவித்தது.

#TamilSchoolmychoice

கல்வியியல் முடிவுகளைத் தவிர்த்து, இந்த மாணவர்களின் உடல் மற்றும் புறப்பாட நடவடிக்கைகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டது என அமைச்சுக் கூறியது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு, விடுதிப் பள்ளிகளில் நுழைவதற்கு 77,487 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.