Home உலகம் வடகொரியா: சுகாதார நிலைமை மோசமடைந்து வருகிறது!

வடகொரியா: சுகாதார நிலைமை மோசமடைந்து வருகிறது!

891
0
SHARE
Ad

வடகொரியா: வடகொரியாவின் சுகாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளரான, ரி ஹோ ரிம் கூறுகையில், வடகொரியாவின் ஆட்சிக்கு எதிரான உலகளாவிய பொருளாதாரத் தடைகள், நாட்டின்மருத்துவத் தேவைகளையும் பாதித்துள்ளதால் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறினார்.

கிட்டத்தட்ட 10.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைவு மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் இல்லாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்ப அலை, சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற தொடர்ச்சியான இயற்கைப் பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் ஏற்கனவே நிலைமை கடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, அமெரிக்க அணுசக்தித் தூதர் ஸ்டீபன் பைகன், வடகொரியாவிற்கு அமெரிக்கர்களின் பயணத் தடை மறுபரிசீலனைச் செய்யப்படும் எனவும், இதன் வாயிலாக மானிய உதவிகளை  அந்நாட்டிற்கு வழங்குவதற்கு இலகுவாக இருக்கும் என அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

கடந்த வாரம், தென் கொரியா, தமிப்லு (Tamiflu), எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளை வடகொரியாவிற்கு வழங்குவதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டது. மருந்துகள் எப்போது வழங்கப்படும், எத்தனை விதமான மருந்துகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பற்றிய விவரங்கள் இந்த வாரம் விவாதிக்கப்படும் என அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.