Home இந்தியா 15 மில்லியன் நூல்களுடன் சென்னை புத்தகக் கண்காட்சி

15 மில்லியன் நூல்களுடன் சென்னை புத்தகக் கண்காட்சி

1149
0
SHARE
Ad

சென்னை – ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக் காட்சி உலகப் பிரசித்தம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி, எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த முறையும் பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சி முதல் முறையாக 17 நாட்களுக்கு நடைபெறுகிறது.

800-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 12 லட்சம் தலைப்புகளில் 15 மில்லியன் புத்தகங்களுக்கு மேலாக கண்காட்சியில் இடம்பெற உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

புத்தக கண்காட்சியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

இங்கு விற்கப்படும் புத்தகங்கள் அனைத்திற்கும் 10% தள்ளுபடி உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கண்காட்சிக்கு வருகை தருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு சிறந்த பதிப்பாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.