Home உலகம் மேற்கு ஜாவாவை சூறாவளி தாக்கியது, ஒருவர் பலி!

மேற்கு ஜாவாவை சூறாவளி தாக்கியது, ஒருவர் பலி!

828
0
SHARE
Ad

ஜகார்த்தா: மேற்கு ஜாவாவிலுள்ள, பாங்குரகன் குலோன் கிராமத்தை நேற்று (ஞாயிற்றுகிழமை), சூறாவளி தாக்கியதால் ஒருவர் இறந்ததோடு, 165 வீடுகள் சேதமடைந்ததாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த சூறாவளி பரந்த அளவிலான அழிவினை ஏற்படுத்தி விட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

தேசியப் பேரழிவு தடுப்பு முகமையின் (National Disaster Mitigation Agency) செய்தித் தொடர்பாளர்,சுதுபோ புர்வோ நுக்ரோஹோ, இந்தச் சம்பவம் மதியம் 3:30 மணி அளவில் நிகழ்ந்ததாகவும், சுற்றியுள்ளப் பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் கூறினார்.

தற்போதைக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, உள்ளூர் அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் மனிதாபிமான தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து,  சூறாவளித் தாக்கத்தினைப் பற்றிய தரவுகளை சேகரித்து வருவதாக சுதுபோ கூறினார்.