“இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு, புதிதாய் பிறக்கும் புத்தாண்டை வரவேற்போம். சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவரும் இந்தியராய் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்” என சென்னை பிரசிடெண்ட் தங்கும் விடுதிகள் குழுமத்தின் தலைவருமான அபுபக்கார் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் கூறியுள்ளார்.
“இப்புதிய ஆண்டு அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த நற்பயன்களை தரும் என்ற நம்பிக்கையோடு இனிதே வரவேற்போம். அனைவரும் புத்துணர்ச்சியோடு, புதுப்பொலிவோடு வாழ நல்வழிகள் அமைய வேண்டும். அனைவருக்கும் இந்திய ஹஜ் சங்கத்தின் சார்பில் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் அபுபக்கார் தெரிவித்துள்ளார்.