Home நாடு புத்ராஜெயாவின் புதிய அடையாள சின்னம் திறந்து வைக்கப்பட்டது!

புத்ராஜெயாவின் புதிய அடையாள சின்னம் திறந்து வைக்கப்பட்டது!

1074
0
SHARE
Ad

புத்ராஜெயா: பிரதமர் மகாதீர் முகமட், இன்று (திங்கட்கிழமை) புத்ராஜெயாவின் புதிய அடையாள சின்னத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இது மத்திய நிர்வாக அரசு மையத்திற்கான புதிதாக வடிவமைக்கப்பட்ட அடையாளமாகும்.

பிரதமரின் அலுவலகத்தைப் பின்னணியில் கொண்டு, அழகு மிகு தேசியக் கொடியின் வண்ணங்களினால் அந்த அடையாள சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

டத்தாரான் புத்ராவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புத்ராஜெயா கார்பரேஷனின் (பிபிஜே) தலைவர் அமினுடின் ஹசீமும் கலந்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அவ்வப்போது நடக்கக் கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அந்த புதிய சின்னத்தின் எழுத்துக்களும் வண்ணங்களும் மாற்றப்படும் என அமினுடின் கூறினார்.