Home வணிகம்/தொழில் நுட்பம் உலக அளவில் கேஎல்ஐஏ விமான நிலையம் 20-வது இடத்தில் இடம்பெற்றது!

உலக அளவில் கேஎல்ஐஏ விமான நிலையம் 20-வது இடத்தில் இடம்பெற்றது!

1106
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) உலகின் முன்னணி பயணத் தரவு மற்றும் நுண்ணறிவு நிறுவனமான ஓஏஜி நடத்திய ஆய்வுப் பட்டியலில் 20-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

15 நிமிடங்களுக்குள் தரையிறங்கும் அல்லது புறப்படும் விமானங்களின் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. சிறிய, நடுத்தர, பெரிய, முக்கிய மற்றும் மிகப்பெரிய வகையிலான விமானங்களின் இருக்கை எண்ணிக்கையை மையப்படுத்தி இந்த தர வரிசை வெளியாக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலான கால அளவில், உலக விமானத் திட்ட தரவுத்தளங்களில் இருந்து, சுமார் 57 மில்லியன் விமான சேவைகள் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டன என அந்நிறுனம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 70.41 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்று 20-வது இடத்தில் இடம்பெற்றது.