Home உலகம் 1எம்டிபி: நடிகர் டிகாப்பிரியோ வாக்குமூலம் கொடுத்தார்!

1எம்டிபி: நடிகர் டிகாப்பிரியோ வாக்குமூலம் கொடுத்தார்!

1563
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்க நீதித் துறையின் 1எம்டிபி குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் லியானார்டோ டி காப்ரியோ சமீபத்தில் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க இரகசியமாக வந்திருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.

இந்த வழக்குக்கு தொடர்புடையவர் கூறுகையில், 1எம்டிபி விசாரணை குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் இரகசியமானவை என்றும், எனவே டிகாப்ரியோ நீதிபதி குழுவிடம் என்ன கூறியிருப்பார் என்று தெளிவாகப் புலப்படவில்லை என்றார். அரசாங்க அதிகாரிகள் எவ்வாறு அவரை, எவ்விதமான அறிவிப்பும் இல்லாமல் கூட்டரசு (பெடரல்) நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர் என்பதும் தெரியவில்லை என்றார்.

மலேசிய தொழிலதிபர் ஜோ லோவின் 1எம்பிடி குறித்த ஊழல் விவகாரத்திற்கு, டிகாப்பிரியோ முக்கிய சாட்சியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. பல பில்லியன் டாலர் முதலீட்டுப் பணத்தை மோசடி செய்ததற்காக ஜோ லோ மீது குற்றம் சாட்டப்படுள்ளது.

#TamilSchoolmychoice

ஆயினும், டிகாப்ரியோ 1எம்டிபி குறித்த விசாரணையின் முக்கிய இலக்கு அல்ல என அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அமெரிக்க நீதித் துறையின் செய்தித் தொடர்பாளரும், டிகாப்ரியோவின் பிரதிநிதியும் இவ்விவகாரம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதற்கு முன்னர், டிகாப்ரியோவின் செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் முற்றிலுமாக டிகாப்பிரியோ ஆதரிப்பார் என்று கூறியிருந்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மாவின் முதல் கணவரின் மகனான திரைப்பட தயாரிப்பாளர், ரிசா அசிஸ், 2012-ஆம் ஆண்டில் பல மில்லியன் கணக்கானப் பணத்தை டிகாப்ரியோ நடித்த ஹாலிவுட் திரைப்படத்தில் முதலீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.