Home நாடு மாமன்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

மாமன்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

1600
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் முகமட் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாக பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் நேற்றுக் (வெள்ளிக்கிழமை) கூறினார்.

இதற்கிடையில், மாமன்னர் பதவி விலகுவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தமக்கு கிடைக்கவில்லை என்று மகாதீர் கூறினார்.

முன்னதாக, மாமன்னர் பதவியில் இருந்து விலகி விட்டதாக வதந்திகள் பரவி வந்ததற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து கிளந்தான் மாநில ஆட்சிக்குழுவும் மறுப்பு தெரிவித்தது.