Home 13வது பொதுத் தேர்தல் லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – மகாதீர்

லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – மகாதீர்

598
0
SHARE
Ad

Dr M still speaking his mindஜோகூர், ஏப்ரல் 1 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிட வரும் ஜ.செ.க கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, ஜோகூரில் வாழும் பல்வேறு சமூக மக்களை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பிகேஆர் கட்சியின் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் மற்றும் பாஸ் கட்சித் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் ஆகியோரையும் இந்தத் தேர்தலில் ஜோகூர் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.

ஜோகூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டமொன்றில் பேசிய மகாதீர்,

#TamilSchoolmychoice

“ எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூரை நோக்கி படையெடுத்து வரும் அன்வார் தலைமையிலான எதிர் கட்சியினரை மக்கள் புறக்கணிப்பதோடு,தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அத்துடன் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகும் லிம் கிட் சியாங்கை தேர்தலில் வீழ்த்தி, ஜோகூர் மாநிலம் தேசிய முன்னணியின் கோட்டை என்பதையும் மக்கள் நிரூபிக்க வேண்டும்” என்று மகாதீர் கேட்டுக்கொண்டுள்ளார்.