அஸ்ட்ரோவின் ஐபிடிவி அகண்டவரிசை, இணைய இணைப்பு சேவையை வழங்குவதோடு, அஸ்ட்ரோவின் முக்கிய அலைவரிசைகளை இணைத்தும் வழங்குகிறது. நேஷனல் பைபரிஷேஷன் அண்ட் கனெக்டிவிட்டி திட்டத்தின் (National Fiberisation and Connectivity Plan) வாயிலாக இந்நிறுவனம் இந்தச் சேவையை வழங்குகிறது.
அஸ்ட்ரோவின் தலைமை நிருவாகி, ஹென்றி டான் கூறுகையில், சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் மூலம் மட்டுமல்லாமல், இணையத்தின் வழி கைபேசி மற்றும் மடிக்கணிணியின் வழியாகவும் பார்க்கலாம் என்றார்.
முதல் கட்ட செயல்முறைத் திட்டம் என்றபடியால், தற்போதைக்கு 1,100 சந்தாதாரர்களை இந்நிறுவனம் குறி வைத்திருக்கிறது.
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், 50 எம்பிபிஎஸ் (Mbps) விரைவு கொண்ட அகண்ட அலைவரிசை 99 ரிங்கிட்டுக்கும், 100 எம்பிபிஎஸ் (Mbps), 129 ரிங்கிட்டுக்கும் விற்கப்படும் என அஸ்ட்ரோ அறிக்கை வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.