Home இந்தியா கடும் பனி மூட்டத்தால் உறைந்த தமிழகம்!

கடும் பனி மூட்டத்தால் உறைந்த தமிழகம்!

1177
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் குளிரும் பனிமூட்டமும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து நீடித்திருந்தது. தாய்லாந்து வளைகுடாவில் உருவான பாபுக் புயலினால், தமிழகத்தில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நீடித்தது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தமிழ் நாடு, 16 பாகைக்கும் குறைவான குளிரை அனுபவித்தது.

கடந்த சனிக்கிழமை, வால்பாறையில் 3.5 பாகை செல்சியஸும், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் 7.3, 7.4 பாகை செல்சியஸும் குளிர் பதிவானது. மேலும், இப்பகுதிகளில், உறைபனி நிலவிதாக வானிலை மையம் கூறியது.

இது குறித்து, தமிழகத்தின் வெதர்மேன் பிரதீப் ஜான் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, தமிழகத்தில் நிலவும் கடும் பனி மற்றும் குளிர் காலம் பொங்கல் வரையிலும் நீடிக்கலாம் என்று தனது பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice