Home நாடு கேமரன் மலை: மஇகாவிற்கு பதிலாக அம்னோ களம் இறங்கலாம்!

கேமரன் மலை: மஇகாவிற்கு பதிலாக அம்னோ களம் இறங்கலாம்!

736
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளரை, வருகிற வியாழக்கிழமை தேசிய முன்னணி அறிவிக்க இருக்கும் வேளையில், அவ்வேட்பாளர் அம்னோ கட்சியைச் சார்ந்து இருக்கலாம் என மஇகா தரப்புக் கூறியுள்ளதாக மலாய் மேயில் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மஇகாவின் மத்திய செயற்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடும் வேளையில்,  இவ்விவகாரம் பற்றிப் பேசப்படும் என அவ்விணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அம்னோ கட்சியின் நடப்புத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் பெயர் உட்பட மேலும் இதர முக்கியத் தலைவர்களின் பெயர்களும் கேமரன் மலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு மாற்றாக, மஇகா கட்சிக்கு, நடப்பிலிருக்கும் பகாங் மாநில செனட்டர் பதவி காலம் முடிந்ததும், அப்பதவி மஇகாவிற்கு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.