Home நாடு நோ ஒமாரின் கூற்று அர்த்தமற்றது!- டி.மோகன்

நோ ஒமாரின் கூற்று அர்த்தமற்றது!- டி.மோகன்

2380
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து, அம்னோ கட்சி வேட்பாளரை கேமரன் மலையில் நிறுத்தினால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனும் நோ ஒமாரின் கூற்றினை, மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மறுத்தார்.

நோ ஒமாரின் அக்கூற்று உண்மையற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை), தற்போதைய சூழ்நிலையில் அம்னோ வேட்பாளர் கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட்டால் மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதோடு, அவர்களுடன் நெருக்கமாக இயங்கவும் முடியும் என நோ ஒமார் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் பாரம்பரியத்தை அவரின் கூற்று மீறியிருப்பதாக மோகன் சாடினார்.

2004-ஆம் ஆண்டிலிருந்து, மஇகா கேமரன் மலையில் போட்டியிட்டு வருவதாகவும், இத்தனை ஆண்டுகளாய் மலாய் சமூகத்தினர், மஇகா வேட்பாளருக்கு ஆதரவை வழங்கிய நிலையில், தற்போது மட்டும் எப்படி, மலாய்காரர்களின் ஆதரவை இழந்திருப்பர் என மோகன் வினவினார்.

இனவாத அரசியலில் இருந்து தேசிய முன்னணி, தங்களை விலக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என மோகன் கூறினார்.

இதற்கிடையில், கேமரன் மலை இடைத் தேர்தலில், மஇகா போட்டியிடுவதிலிருந்து விலகியது, தமக்கு வருத்தத்தைத் தருவதாக மோகன் தெரிவித்தார்.