Home இந்தியா அன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

அன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

2200
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இங்கு நடைபெற்று வரும் ரெய்சினா கலந்துரையாடலிலும் கலந்து கொள்கிறார். இன்று அந்தக் கலந்துரையாடலில் சிறப்புரையும் நிகழ்த்தவிருக்கிறார்.

இதற்கிடையில் நேற்று அன்வார் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜைச் சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து மேம்படுவது தொடர்பில் சுஷ்மாவுடனான தனது சந்திப்பு அமைந்ததாக அன்வார் தெரிவித்துள்ளார்.