Home இந்தியா அன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு

அன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு

1693
0
SHARE
Ad

பெங்களூரு – இந்தியாவுக்கான 5 நாள் வருகையின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை கர்நாடகப் பிரதேசத்தின் தலைநகர் பெங்களூரு வந்தடைந்த பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நேற்று வெள்ளிக்கிழமை அம்மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தார்.

அன்வாருக்கு குமாரசாமி வரவேற்பு அளித்துக் கௌரவித்தார்.

இங்கு அன்வார் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் வணிகக் கலந்துரையாடலிலும் பங்கு பெற்று அன்வார் உரையாற்றுவார்.

#TamilSchoolmychoice

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளுடனும் அன்வார் பெங்களூருவில் சந்திப்பு ஒன்றை நடத்துவார்.