Home கலை உலகம் ரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை

ரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை

1395
0
SHARE
Ad

சென்னை – தனது விஸ்வாசம் படத்தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ‘பேட்ட’ படத்துடன் போட்டி போட்டுக் கொண்டு துணிச்சலாக வெளியிட்டதில் அஜித் தற்போது ஒட்டுமொத்த தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் சினிமா இரசிகர்களின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறார்.

இந்த வகையில் இரண்டு சாதனைகளை அஜித் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். முதலாவது, ரஜினி படம் வெளியான அன்றே தனது படத்தையும் துணிச்சலுடன் வெளியிட்டது.

ரஜினி படம் என்றாலே தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி, இந்திப் படங்கள் கூட அஞ்சி ஒதுங்கிக் கொண்டு வழிவிடுவது வழக்கம். அண்மைய ஆண்டுகளில் ரஜினி படத்தோடு எந்தப் படமும் மோதியதில்லை என்கிறார்கள்.

#TamilSchoolmychoice

தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பொறுத்தவரை ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கு முன்னர் 1992-ஆம் ஆண்டில்தான் தீபாவளிக்கு கமல்ஹாசனின் தேவர் மகன் படமும், ரஜினியின் பாண்டியன் படமும் ஒரே நாளில் வெளியீடு கண்டு மோதின. அதில் தேவர் மகன் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவிக்க, பாண்டியன் சுமாரான வெற்றியையே பெற்றது.

ஆனால், அதன்பிறகு இரு பெரும் நட்சத்திரங்கள் ஒரே நாளில் போட்டி போட்டுக் கொண்டு களமிறங்கும் கொண்டாட்டம் நிகழவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அனைவரும் ரஜினி படம் என்றாலே ஒதுங்கிக் கொள்வது.

இந்நிலையில்தான் ரஜினி படம் என்றாலும் மோதிப் பார்த்துவிடுவோம் எனக் களமிறங்கிய அஜித்தை தமிழ்த் திரையுலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது.

அஜித் நிகழ்த்தியிருக்கும் அடுத்த சாதனை தமிழ் நாட்டில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வசூலை வாரிக் குவித்திருக்கிறது. வெளியிட்ட ஓரிரு நாட்களிலேயே பேட்ட இதுநாள்வரை 9.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்க விஸ்வாசத்தின் வசூலோ 10 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது என்ற தகவலை வெளியிட்டிருக்கின்றன சில ஊடகங்கள்.

இதன் மூலம் ரஜினியோடு போட்டியில் இறங்கியதோடு ரஜினி படத்தைவிட அதிக வசூலையும் வாரிக் குவித்திருக்கிறது அஜித்தின் விஸ்வாசம்.

ஆனால், இது தமிழக அளவில்தான்! உலக அளவில் வசூல் ரீதியாக பேட்ட படமே முன்னணி வகிக்கிறது.