Home நாடு மாடுகளைக் காட்டிலும் மக்களே குழுவாக இரதத்தை இழுக்கலாம்!- இராமசாமி

மாடுகளைக் காட்டிலும் மக்களே குழுவாக இரதத்தை இழுக்கலாம்!- இராமசாமி

985
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: வருகிற தைப்பூசத் திருவிழாவின் போது இரதங்களை இழுக்க, மாடுகளைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறவாரியம் (PHEB) தெரிவித்தது.

அவ்வாரியத்தின் தலைவரும், பினாங்கு மாநில துணை முதல்வருமான, பி. ராமசாமி கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இவ்வாறு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு விட்ட வேளையில், சிலர் இன்னமும் இச்செயலை செய்து வருவது ஏற்க முடியாத ஒன்று என்றார்.

#TamilSchoolmychoice

தேவைகள் ஏற்பட்டால், மாடுகளை துணையாக அழைத்துச் செல்லலாமேத் தவிர, அவற்றை இரதத்தை இழுக்கும் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என இராமசாமி அறிவுறுத்தினார். இவ்வாறான, கொடுஞ்செயல்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றும், வேண்டுமானால் மக்கள் ஒன்றாக சேர்ந்து இரதத்தை இழுத்து இறைவனின் அருளைப் பெறலாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.