அமெரிக்கா: எதிர்பார்த்ததைவிட குறைவான ஐபோன்கள் விற்கப்பட்டதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனம், சில பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை தற்காலிகமாக நிறுத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி டிம் குக் (Tim Cook), இது குறித்து இம்மாத தொடக்கத்தில், தமது ஊழியர்களைச் சந்தித்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவில், ஆப்பிள் நிறுவனம் சில பிரச்சனைகளை எதிர் நோக்கி வந்தது இந்த பிரச்சனைக்குக் காரணமாக அமைகிறது எனக் கூறப்படுகிறது.
ஆப்பிள் பங்குகள் ஜனவரி 16-ஆம் தேதி, 1 விழுக்காட்டிற்கும் குறைவாக சரிவுக் கண்டன.
இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர்கள், மூத்த இயக்குநர்கள் மற்றும் பிற மேலாளர்களுடன் சந்திப்பு நடத்தினர். ஐபோன் விற்பனை சரிந்து வரும் சூழலை,புதிய கண்டுபிடிப்பிற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுவதாக இவர்கள் குறிப்பிட்டனர்.
சீனாவின் பொருளாதார மற்றும் தொழில்துறைப் பிரச்சனைகள் காரணமாக, ஐபோன் விற்பனை குறைவாக பதிவிடப்படிருக்கிறது என ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டது.