Home இந்தியா ‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்!

‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்!

1331
0
SHARE
Ad

பெங்களூரு: தைப் பொங்கலுக்கு அடுத்து வரும் மாட்டுப் பொங்கலை, நேற்று (புதன்கிழமை) தமிழ் நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதற்கிடையே, கர்னாடகா மாநிலத்தில், பக்தர்கள் மாடுகளை நெருப்பில் ஓடவிட்டு மாட்டுப் பொங்கலைக் கொண்டாடினர். இந்த நடைமுறை பழங்கால வழக்கமாக இம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

நெருப்பில் மாடுகளை ஓடவிடப்படும் இவ்வழக்கமானது, மக்களை தீயவைகளிலிருந்து பாதுகாப்பதோடு, அதிர்ஷ்டங்கள் இவர்களது வாழ்க்கையில் நடப்பதற்கும் உதவுவதாக நம்பிக்கைக் கொள்கிறார்கள்.        

‘மகர சங்கராந்தி’ என அழைக்கப்படும் இத்திருவிழா, வசந்த காலத்தின் வருகைக்கு அடையாளமாக கொண்டாடப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் இத்திருவிழா, பட்டம் விட்டும், இதர சமய நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூரில், மாடுகளுக்கு மாலைகள், மணிகள் என அணிவித்து, நெருப்பில் ஓட விடுவார்கள்.

பழங்கால சடங்காகக் கொண்டாடப்படும் இத்திருவிழா, கால்நடை மற்றும் பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து, மக்களுக்கு நன்மையைப் பயக்கும் என நம்பப்படுகிறது.