75 வயதான தலைவர்கள் தங்களின் பதவிகளில் இருந்து கட்டாயமாக விலகிக் கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் கொள்கை அடிப்படையில் எடியூரப்பா பதவி விலகியிருக்கிறார். அவருக்கு தற்போது வயது 76.
2019-இல் 4-வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா 2 ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வராக இருப்பேன் என அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இந்த ஜூலை மாதத்துடன் அவருக்கான இரண்டு ஆண்டு கால தவணைக்காலம் முடிவடைந்திருக்கிறது.
தமிழ் நாட்டுடன் காவிரிப் பிரச்சனைகள் மற்றும் மேகதாது அணை கட்டுதல் என சில முக்கியப் பிரச்சனைகள் நிலவி வரும் நிளையில் எடியூரப்பாவின் பதவி விலகல் நிகழ்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக புதிய முதல்வராகப் பதவியேற்கவிருப்பவர் யார் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
புதிய முதல்வராகப் பதவியேற்பவர் தமிழ்நாட்டுடன் பேசி காவிரி பிரச்சனையில் எத்தகைய தீர்வுகளைக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு இரு மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கிறது.